அம்பிகை ஒரு கைப்பிடி மண் எடுத்து லிங்கம் அமைத்து வழிபட்ட தலமாதலால் 'சிறுபிடி' என்பது மருவி 'சிறுகுடி' என்று பெயர் பெற்றது.
இத்தலத்து மூலவர் 'சூட்ஷமபுரீஸ்வரர்', 'மங்களநாதர்' என்னும் திருநாமங்களுடன், சிறிய வடிவ லிங்க மூர்த்தியாக அருள்பாலிக்கின்றார். அம்பிகை 'மங்களநாயகி' என்னும் திருநாமத்துடன் சிறிய வடிவினளாக காட்சியளிக்கின்றாள்.
பிரகாரத்தில் மங்கள விநாயகர், வள்ளி, தேவசேனை சமேத சுப்பிரமண்யர் ஆகியோர் தரிசனம் தருகின்றனர்.
அம்பிகை, கருடன், செவ்வாய், கந்தர்வர்கள் ஆகியோர் வழிபட்ட தலம்.
இங்கு வைத்தீஸ்வரன் கோயில் போல் செவ்வாய் பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. செவ்வாய் தோஷ பரிகாரங்களும் செய்கிறார்கள்.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|